வெற்றியை கொண்டாடவேண்டிய நேரம் இதுவல்ல -பினராயி விஜயன்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டிய நேரம் இது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
பினராயி விஜயன்
பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆளும் இடதுசாரி கூட்டணி முன்னிலையில் உள்ளது. 

141 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஆட்சியமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாலை 5 மணி நிலவரப்படி இடதுசாரி கூட்டணி 96 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

இந்த வெற்றி குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:

இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளா தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், கொரோனா தொடர்ந்து பரவி வருவதால் இது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய நேரம் அல்ல. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டிய நேரம். 

கேரளாவில் இன்று 31,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com