திருவோணம் அருகே வாலிபரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்குதல்

திருவோணம் அருகே வாலிபரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவோணம் அருகே வாலிபரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்குதல்
Published on

திருவோணம்:

தஞ்சை, கரம்பக்குடி அருகே உள்ள தென்நகரைச் சேர்ந்தவர் முத்து (வயது 37). டெய்லர். இவரது மனைவி விஜயலட்சுமி.

முத்து நேற்று கரம்பக்குடியில் இருந்து ஊரணிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவோணம் அருகே பணிகொண்டான் விடுதி பிரிவு சாலையில் சென்றபோது கையில் முறுக்கு கம்பியுடன் வாலிபர் ஒருவர் முத்துவை வழிமறித்தார். இதை பார்த்து முத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது அந்த நபர் கையில் வைத்திருந்த கம்பியால் முத்துவின் தலை மற்றும் உடலில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் தலையில் பலத்த காயத்துடன் முத்து கீழே சாய்ந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார் முத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை தாக்கிய நபர் யார்? எதற்காக தாக்கினார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com