திருவோணம் அருகே லாரி மோதி முதியவர் பலி

திருவோணம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவோணம் அருகே லாரி மோதி முதியவர் பலி
Published on

திருவோணம்:

திருவோணம் அருகே பட்டுவிடுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 61). இவர் ஊரணிபுரத்தில் இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று இரவு கடையில் இருந்து பட்டுவிடுதிக்கு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து கந்தவர்க்கோட்டை நோக்கி சென்ற லாரி மோதி சம்பவ இடத்திலேயே தங்கவேலு பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஏட்டு தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சென்று உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய பட்டுக்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com