திருவோணம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

திருவோணம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

திருவோணம்:

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பில்லுவெட்டு விடுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் தங்கமுத்து (வயது 28). இவர் கறம்பக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்ததும், கறம்பக்குடியில் இருந்து தனியார் பஸ்சில் ஏறிவந்தார், அந்த பஸ் மூவர் ரோடு என்ற இடத்தில் சென்ற போது டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறி தங்கமுத்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயை பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான தங்கமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com