திருவேங்கடத்தில் பெண்களுக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

திருவேங்கடத்தில் பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவேங்கடத்தில் பெண்களுக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
Published on

சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டியை சேர்ந்தவர் மாடசாமி மனைவி அன்னத் தாய் (வயது62). இதே பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (65). அன்னத்தாய் மற்றும் பவுல்ராஜ் ஆகியோருக்கு இடையே காலிமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் சம்பவத் தன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அன்னத்தாயை அந்த வழியாக வந்த பவுல்ராஜ் என்னைப்பற்றி எப்படி மற்றவர்களிடம் கூறலாம் என கேட்டு அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டாராம். இது பற்றி திருவேங்கடம் போலீசில் அன்னத்தாய் புகார் செய்தார். புகாரின்பேரில் பவுல்ராஜை போலீசார் கைது செய்தனர்.

அதே போல் சம்பவத்தன்று பவுல்ராஜ் மனைவி முனியம்மாள் (50) என்பவரை மாடசாமி, அன்னத்தாய் ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தனராம்.

இது பற்றிய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாடசாமியை கைது செய்தனர். அன்னத் தாயை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com