திருத்தணி அருகே வாலிபர் தற்கொலை

திருத்தணி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த முருகம்பட்டு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் இளங்கோவன் (வயது 26). திருமணமாகாதவர். நேற்று இவர் வீட்டு முன்பு தூக்கில் தொங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com