திருப்பனந்தாள் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

திருப்பனந்தாள் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பணம் கொள்ளை
பணம் கொள்ளை
Published on

கும்பகோணம்:

திருப்பனந்தாள் அருகே சோழபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை வியாபாரம முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

கடையில் இருந்த மளிகை பொருட்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசில் ஷாஜகான் புகார் செய்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com