திருநின்றவூரில் டாஸ்மாக் கடையில் ரூ. 2 லட்சம் கொள்ளை

திருநின்றவூரில் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநின்றவூரில் டாஸ்மாக் கடையில் ரூ. 2 லட்சம் கொள்ளை
Published on

திருநின்றவூர்:

திருநின்றவூர் கலர் காலனியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சூப்பர் வைசராக திருவள்ளூரை சேர்ந்த ரகுபதி பணியாற்றி வருகிறார்.

மதியம் மதுக்கடையை திறக்க வந்தபோது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ. 2 லட்சத்து 9 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் தரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த பணப் பெட்டியை உடைத்து பணத்தை அள்ளிச் சென்று இருந்தனர்.

இது குறித்து திருநின்றவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக மதுக்கடை ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com