தேனி அருகே மரத்தை வெட்டிய விவசாயி மின்சாரம் தாக்கி பலி

தேனி அருகே மரம் வெட்டும் போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக பலியானார்.
தேனி அருகே மரத்தை வெட்டிய விவசாயி மின்சாரம் தாக்கி பலி
Published on

தேனி:

தேனி அருகே உள்ள பூமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). விவசாயி. இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் தீச்சட்டி எடுப்பதற்காக மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் மேல் சென்ற மின் கம்பி ராஜேந்திரன் மீது தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com