தேனி அருகே வேலைக்கு சென்ற முதியவர் மாயம்

தேனி அருகே வேலைக்கு சென்ற முதியவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே வேலைக்கு சென்ற முதியவர் மாயம்
Published on

தேனி:

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 75). இவரது மகளை பெரியகுளம் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். சாக்கு தைக்கும் வேலை பார்த்து வந்த கனகராஜ் கடந்த சில மாதங்களாக தனது மகள் வீட்டில் இருந்தபடியே சுருளி அருகில் உள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற கனகராஜ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com