

போடி:
போடி அருகே காட்டுத்தீயில் சிக்கி 26 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. சகானா (வயது 20), சென்னை குரோம்பேட்டை கிருஷ்ணன் நகரைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவரின் மகள்.
2. நிவேதா (23), சென்னை வடபழனி மோகன்ராஜ் என்பவரின் மகள்.
3. விஜயலட்சுமி (27), சென்னை முடிச்சூர் ரவியின் மகள்.
4. பூஜா (27), சென்னை வேளச்சேரி.
5. மோனிஷா (30), சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி.
6. அனுவித்யா (25), சென்னை கீழ்ப்பாக்கம் முத்துமாலை ராஜாவின் மகள்.
7. இலக்கியா (29), சென்னை போரூரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி.
8. சுவேதா (28), சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் மனைவி.
9. நிவ்யா பிரக்ருதி (24), சென்னை நங்கநல்லூர் கே.கே.ராஜன் என்பவரின் மகள்.
10. பார்கவி (23), சென்னையைச் சேர்ந்த சூரியநாராயணனின் மகள்.
11. ஜெயஸ்ரீ (32), சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி.
12. வாசுமதி (20), சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள்.