பாகிஸ்தானில் மாயமான இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் திரும்பி வந்தனர்

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் 2 அதிகாரிகளை காணவில்லை என தகவல் வெளியாகிய நிலையில் தற்போது திரும்பி வந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம்
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம்
Published on

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் அதிகாரிகளில் 2 பேரை இன்று காலை முதலே காணவில்லை என தகவல் வெளியானது.

பாகிஸ்தான் தரப்பிலும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் பத்திரமாக திரும்பியுள்ளனர்.

அவர்கள் இருவரும் சென்ற வாகனம் ஒருவர் மீது மோதியதால் மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை இருவரையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்ததாவும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com