பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மேலும் குறைப்பு

கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் கிருஷ்ணா தண்ணீர் குறைக்கப்பட்டது.
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மேலும் குறைப்பு
Published on

ஊத்துக்கோட்டை:

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி 2-ந்தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

முதலில் கண்டலேறு அணையிலிருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர். பின்னர் 2450 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளவு 68 டிஎம்சி. இன்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 6.50 டிஎம்சி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 330 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது.

இந்த நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வெறும் 80 கன அடியாக வந்து கொண்டிருந்தது.

ஜனவரி 2-ந்தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2246 மில்லியன் கனஅடி (2. 246 டிஎம்சி) தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை ஏரியின் நீர் மட்டம் 30.60 அடியாக பதிவானது. 1882 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 360 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 18 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com