மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நிதி உதவி

மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தனது ஒருமாத சம்பளத்தை வழங்கினார்.
மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நிதி உதவி
Published on

ராஜபாளையம்:

தி.மு.க. செயல் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் தலைவராக பொறுப் பேற்றார். இதையொட்டி ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தனது தொகுதியில் உள்ள சாரோன் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளிக்கு தனது 27-வது மாத ஊதியமான 55 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைவரானதை கொண்டாடும் வகையில் இந்த உதவியை வழங்கியுள்ளேன்.

மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும், ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவார்.

மேலும் மாணவர்களுக்கு உணவு வழங்க அரிசி வழங்கப்படும். விரைவில் மாவட்டச் செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அனுமதி பெற்று ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தங்கசாமி, நகரச் செயலாளர் ராம மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல் முருகன், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com