தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 2-வது சுரங்கப்பாதை தயார்

தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து இருக்கிறது. இது விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. #MetroTrain
தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 2-வது சுரங்கப்பாதை தயார்
Published on

சென்னை:

சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமானநிலையம் வரையும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ். முதல் விமானநிலையம் வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் உள்ளன. இவற்றுக்கு 4 வழிகளில் பயணிகள் சென்று வரலாம்.

இதில் சின்னமலையில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையம் வரை ரெயில் போக்குவரத்து தொடங்கிய போது, இந்த ரெயில் நிலையத்தின் கிழக்கு பக்கத்தில் 2 வாயில்கள் திறக்கப்பட்டன. இவை மட்டும் பயணிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்தநிலையில் டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணாசாலையை கடந்து மேற்கு பக்கம் செல்லவும், இந்த நிலையத்தின் வடக்கு, தெற்கு வாயில் பகுதியில் இருந்து செல்லவும் அண்ணா சாலையின் கீழ் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு பாதை முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தற்போது அண்ணா சாலையின் மேற்கு பக்கத்தில் உள்ள டி.எம்.எஸ். பஸ் நிறுத்தம் வரை அமைக்கப்பட்ட 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து இருக்கிறது. இது விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #MetroTrain

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com