ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு - பஞ்சாயத்து தலைவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்தார்.
பாதுகாப்பு பணியில் வீரர்கள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வெசு பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருபவர் சஜ்ஜத் அகமது காண்டே.

இந்நிலையில், இன்று காலை அகமது வீட்டை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த அகமதை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com