

தென்காசி:
தென்காசியில் ஓய்வு பெற்ற மின்சார தொழிலாளர் அசோசியேசன் 11-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு கிளைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
விழாவில் மின்வாரிய ஓய்வூதியர்கள் மறைவுற்றால் வழங்கப்படும் குடும்ப காப்பு நிதி ரூ.50 ஆயிரம் குடும்ப ஓய்வூதியர்கள் மறைவுற்றால் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை 32 மாதங்களாக நடைமுறைப்படுத்தாத மின்வாரியத்தை கண்டிக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் ஓய்வூதிய உயர்வினை மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது போல் மின்சாரவாரிய ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தென்காசி-நெல்லை சாலை குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட கலந்து கொண்டனர். #tamilnews