

மதுரை:
ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க இருந்த மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
"மீனாட்சி கோவிலில் திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் மே 4 ல் சேத்தி மண்டபத்தில் நடைபெறும். 4 சிவாச்சாரியார்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி திருக்கல்யாண நிகழ்வை நடத்தி வைப்பர். WWW.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்படும்.
திருமணமான பெண்கள் தங்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்து புதிதாக மங்கல நாண் அணியும் மரபை பின்பற்றலாம். மே 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் புதிய மங்கல நாண் மாற்றிக்கொள்ள உகந்த நேரம்” என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.