களக்காட்டில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

களக்காட்டில் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
களக்காட்டில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
Published on

களக்காடு:

களக்காடு சிதம்பராபுரம் அருகே உய்க்காட்டு சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகியாக சிதம்பராபுரத்தை சேர்ந்த சுப்பையா (வயது 62) என்பவர் இருந்து வருகிறார். நேற்று கோவிலை அடைத்து விட்டு சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தனர். அப்போது கோவிலில் உள்ள ஒரு அறை உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகி சுப்பையா உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதில் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து கொள்ளை போனது. தற்போது மீண்டும் 2-வது முறையாக உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போனது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com