டிச. 31 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு டிசம்பர் 31-ம் தேதி முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது என மாநில மின்வாரியம் அறிவித்துள்ளது.
டிச. 31 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்: தெலுங்கானா அரசு அறிவிப்பு
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு டிசம்பர் 31-ம் தேதி முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது என மாநில மின்வாரியம் அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31-ம் தேதி இரவு முதல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு என 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கும் மாநிலம் தெலுங்கானா. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.

அரசின் இந்த திட்டத்தின் மூலம் 23 லட்சம் விவசாய பம்ப் செட்கள் பயனடையும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என அறிக்கை தெரிவிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com