அரியானாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - புளூ வேல் விளையாட்டு காரணமா?

அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் 17 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு புளூ வேல் விளையாட்டு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியானாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - புளூ வேல் விளையாட்டு காரணமா?
Published on

சண்டிகர்:

அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது வாலிபர் சண்டிகரில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வாலிபர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்த காரணம் பற்றி தெரியவில்லை.

இன்று வாலிபரின் பெற்றோர்கள் தன் மகன் டைரியில் படங்கள் மற்றும் குறிப்புகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதை பார்க்கும்போது மாணவன் புளூ வேல் விளையாட்டினால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்துள்ளது. உடனே போலீசிற்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, மாணவன் புளூ வேல் விளையாட்டால் மரணமடைந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், மாணவனின் கையில் புளூ வேல் படம் வரையப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com