160 பயணிகளுடன் லண்டன் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - அவசரமாக சென்னை திரும்பியது

மீனம்பாக்கத்தில் இருந்து 160 பயணிகளுடன் லண்டன் நோக்கி சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அவசரமாக சென்னை திரும்பி தரையிறங்கியது.
160 பயணிகளுடன் லண்டன் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - அவசரமாக சென்னை திரும்பியது
Published on

சென்னை:

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டு சென்றது.

ஓடுபாதையில் இருந்து உயரக்கிளம்பி, வானத்தில் பறந்தபோது விமானத்தில் என்ஜின் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை அறிந்த விமானி, அவசரமாக தரையிறங்க சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததையடுத்து அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது.

அந்த விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட 160 பயணிகளும் சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தின் இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டவுடன் இன்று பிற்பகல் அதே விமானம் லண்டன் நகருக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com