முத்தியால்பேட்டையில் ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை

நோய் கொடுமையால் மனமுடைந்த ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டையில் ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவரது மகள் ஜெகதீஸ்வரி (வயது 27). பி.டெக். படித்து முடித்து இருந்த இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களாக ஜெகதீஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாக வில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஸ்வரிக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெகதீஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி அவர் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெகதீஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com