

சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.06.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெ.ஜெ.நகர், அம்மன் நகர், பி.ஜி.அவென்யு, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.
நாகல்கேணி, குரோம்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பஜனை கோவில் தெரு, ரெட்டமலை ஸ்ரீனிவாசன் தெரு, டி.வி.எஸ் லட்சுமணன் நகர், கோதண்டம் நகர், கல்யாணிபுரம், எம்.சி.ராஜா தெரு.
பள்ளிக்குப்பம், சண்முகா நகர் மற்றும் இணைப்பு, கூட்டுறவு நகர் நான்காம் கட்டம், அன்னம்மாள் தெரு, சவிதா கல்லூரி, பி.எச். சாலை.