எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா குறித்து 4 பேர் அளித்துள்ள விளக்கத்தை இனிதான் பார்க்கவேண்டும் - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

ராஜினாமா செய்தவர்கள் அளித்துள்ள விளக்கம் குறித்து இனிமேல் தான் பார்த்து, படித்து, ஆய்வுசெய்து, முறையான தீர்ப்பை வழங்க வேண்டும் என சபாநாயகர் கூறினார்.
TN Speaker on Disqualification Plea
Published on

அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் 4 பேர் ராஜினாமா குறித்து சபாநாயகர் விளக்கம்:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் தகுதியின்மையாக்குதல் விதிகளின்படி அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த சம்பந்தப்பட்ட நான்கு பேர்களுக்கும் திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), திரு எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி), திருமதி சத்யபாமா (தாராபுரம் தொகுதி), திரு இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் தொகுதி) ஆகிய நான்கு பேர்களுக்கும் விதியின் கீழ் 7 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு கோரப்பட்டது.

தற்போது அந்த நான்கு பேர்களும் தங்களின் விளக்கத்தினை உரிய காலத்திற்குள் அளித்துள்ளனர். மனு மீது உரியான ஆய்விற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நான் அறிவிப்பேன்.

அவர்கள் அளித்துள்ள விளக்கம் குறித்து இனிமேல் தான் பார்க்கவேண்டும், படிக்கவேண்டும், ஆய்வுசெய்ய வேண்டும், முறையான தீர்ப்பை வழங்க வேண்டும், கால அவகாசம் வேண்டும், உரிய நேரத்தில் உரிய முறைப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளை காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடுகிறது.

இவ்வாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com