வீட்டில் வெடி மருந்து வெடித்து ஒருவர் பலி

பெண் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளித்து வருகின்றனர்.வெடி மருந்து வெடித்ததில் அருகில் இருந்து வீடுகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன.
வீட்டில் வெடி மருந்து வெடித்து ஒருவர் பலி
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் கொக்குளம் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்து திடீரென வெடித்ததில் சதீஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீட்டில் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த வெடி மருந்து வெடித்ததில் வீடு தரைமட்டமானது.

அதேபோல வெடி மருந்து வெடித்ததில் அருகில் இருந்த வீடுகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன.

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடி மருந்து வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com