குதிரை பேரம் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி மோகனா அடங்கிய அமர்வில் இன்று விசாரணை.
CM Vijay- Supreme court
Published on

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,"நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சி அமைத்தது.

எனினும், தி.மு.க. கூட்டணியில் இருந்த சில கட்சிகள் மற்றும் அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினரின் ஆதரவோடு, கடந்த 13-ந் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற அரசியல் கட்சிகளிடையே ரூ.1,000 கோடி அளவுக்கு குதிரை பேரம் நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை தமிழகத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ரிட் மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி மோகனா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குதிரை பேர வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

குதிரை பேரம் விவகாரத்தை பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com