

கோடைகால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இந்த மாதம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
ரெயில் எண். 06183 எழும்பூரில் இருந்து 19, 20, 26, 27 ஆகிய நாட்களில் (வெள்ளி, சனி) மாலை 7 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் மறுநாள் காலை 9.15 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது.
இதேபோல செங்கோட்டையில் இருந்து (எண். 06184 ) சிறப்பு ரெயில் 20,21,27, மற்றும் 28 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செல்கிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.