

சமூக நீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா ஆகியோர் வரவேற்பு அளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணி கூறியதாவது:-
69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூக நீதி சர்வே அவசியம்.
பாமக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமூக நீதி கணக்கெடுப்பை விரைவில் நடத்த பாமக தொடர்ந்து வலியுறுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.