தவெகவில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன்!

பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார்.
தவெகவில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன்!
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார்.

1971ம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயணிக்கும் மகேந்திரன், பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். ஒரு அரசியல்வாதியாக மட்டுமில்லாமல், தமிழ் கட்டுரையாளர், பேச்சாளர் என பன்முகங்களை கொண்டவர்.

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் உள்ளார். இவருக்கு முன்னதாக இருந்த முத்தரசனை எதிர்த்து அப்போது அப்பதவிக்கு போட்டியிட்ட மகேந்திரன், அவர் தேர்ந்தெடுக்கபடாத நிலையில், கட்சியின் தீவிர செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com