சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்!

இன்று (ஜூன்.16) 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்!
Published on: 

தமிழ்நாடு அரசு 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா, பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கே. பொற்கொடிக்கு பதிலாக சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த . கே. பொற்கொடி, பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே மாற்றப்பட்ட சரண்யா அரியின் இடத்திற்கு சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) இருந்த ஆர். ஐஸ்வர்யா, நிஷாந்த் கிருஷ்ணாவிற்குப் பதிலாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com