

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐயூஎம்எல் அமைச்சர் ஷாஜகான், அடுத்த 50 ஆண்டுகளில் திமுக துடைத்தெறியப்படும் என தெரிவித்தார். இதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,
“திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உழைப்பால் வெற்றிபெற்று இன்று அமைச்சராக இருக்கும் ஷாஜஹான், திமுகவிற்கு எதிராக இப்படி பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு. மன்னர் ஷாஜகான் மும்தாஜுக்கு கல்லறை கட்டினார், இந்த ஷாஜஹான் அவர் சார்ந்துள்ள கட்சியின் அருமை, பெருமைகளுக்கு சமாதி கட்டும் வேலைகளை செய்து வருகிறார்.
சிறுபான்மையினர் வாக்கு திமுகவிற்கு கிடைக்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்படும் சதி. இஸ்லாமியர்கள் நிறைந்த தொகுதிகளில் திமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்பதை ஆங்கில நாளிதழ்கள் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.
டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது இஸ்லாமியர்கள், திமுக மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு ஒரு சான்று.
இஸ்லாமியர்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் தவெக வெற்றிப்பெறவில்லை என்பதை எடுத்துக்கொள்ளாமல், திட்டமிட்டு பரப்படும் சதிகள் இவை. தவெக தேர்தல் அறிக்கையில் கொடுத்த பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை.
கஜானா காலியானது என்ற வாதமே தவறானது என ப.சிதம்பரம் கூட கூறியிருந்தார். அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமே கடந்த திமுக அரசு கொண்டுவந்த ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது.” என தெரிவித்தார்.