மயானங்களை பூஞ்சோலையாக்க வேண்டும்- கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்

சுடுகாடுகளுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.குடிநீர் வசதி காம்பவுண்டு சுவர் போன்றவைகளையும் உருவாக்கி கொடுக்க வேண்டும்.
மயானங்களை பூஞ்சோலையாக்க வேண்டும்- கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்
Published on

சென்னை:

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, சுடுகாடுகளுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மயானங்களில் அமர்வதற்கு தேவையான கொட்டகைகள், நிழல் தரும் மரங்கள், பூச்செடிகள் நட்டு பசுமையான மயானங்களாக உருவாக தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீர் வசதி காம்பவுண்டு சுவர் போன்றவைகளையும் உருவாக்கி கொடுக்க வேண்டும். மயானங்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்று புகார்கள் வருகிறது. எனவே மயானங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com