ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து தயாளு அம்மாள் வீடு திரும்பினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு முதுமை காரணமாக கடந்த 3-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தயாளு அம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து தயாளு அம்மாள் வீடு திரும்பினார்
Published on

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு முதுமை காரணமாக கடந்த 3-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தயாளு அம்மாளை பார்த்தார். சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடமும் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று இரவு 8.30 மணி அளவில் தயாளு அம்மாள் வீடு திரும்பினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் தயாளு அம்மாள் அங்கு ஓய்வெடுத்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com