அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி- ஆர்டிஐ மூலம் அம்பலம்

அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி- ஆர்டிஐ மூலம் அம்பலம்
Published on: 

மதுரை:

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வாடகை அடிப்படையில் மண்டல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ரூ.59 லட்சத்தை அறநிலையத்துறை பாக்கி வைத்துள்ளது.

ஆர்டிஐ சட்டத்தின் கீழ், வாடகை பாக்கி ரூ.59 லட்சம் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

வாடகை பாக்கியை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை செலுத்தவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com