திருச்சி கிழக்கில் முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

திருச்சி கிழக்கில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
திருச்சி கிழக்கில் முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
Published on

திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

விஜய்மீது வருமான வரி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளநிலையில், அதனை வேட்புமனுவில் மறைத்ததாகவும், இதனால் தன்னை வெற்றிப் பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இருதொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றிப்பெற திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்தார். விரைவில் அத்தொகுதி உட்பட இன்னும் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் புலிப்பட வருவாயை மறைத்ததாக, விஜய்மீது இருக்கும் வருமான வரி வழக்கை வேட்புமனுவில் மறைத்ததாக, இனிகோ இருதயராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com