

மேகதாது அணைக்கு எதிராக நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேகதாது அணை திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தீர்மானத்தை முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது உரையில் மேகதாது விவகாரம் குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, நாளை இத்தீர்மானம் முன்மொழியப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விஜய்யிடம் பேச தயாராக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் டிகே. சிவகுமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.