வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு பஸ்கள்
Published on

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 350 பஸ்களும், 20-ந்தேதி (சனிக்கிழமை) 365 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19-ந்தேதி வெள்ளிக்கிழமை 55 பஸ்களும், 20-ந்தேதி சனிக்கிழமை 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 19 மற்றும் 20-ந் தேதிகளில் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com