பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை

தகவல் அறிந்து சென்ற விருகம்பாக்கம் போலீசார் மாணவி பூஜா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
Published on

சென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சந்துரு. இவரது மனைவி நந்தினி. இவர்களது மகள் பூஜா(வயது13) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

வார விடுமுறையை முன்னிட்டு தோழிகளுடன் விளையாடிவிட்டு வீடு திரும்பிய பூஜாவை "சரியாக பாடம் படிக்கவில்லை" என்று கூறி அவரது தாய் தந்தை இருவரும் கண்டித்தனர். இதனால் மன வேதனை அடைந்த பூஜா திடீரென வீட்டு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற விருகம்பாக்கம் போலீசார் மாணவி பூஜா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com