ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை

விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை
Published on

ஈரோடு ரங்கம் பாளையம் கந்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமியப்பன் (64) ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று தனது குடும்பத்துடன் காலை துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து மதியம் அவர் தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாமியப்பன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 55 பவுன் நகைகள் 20,000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டவுன் டி.எஸ்.பி. முத்துக்குமார் தாலுகா போலீசின் இன்ஸ்பெக்டர் தமிழரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் சம்பவ இடத்துக்கு மூப்பனாய் வால்டர் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை ஆய்வு செய்தனர்.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் சாமியப்பனுக்கு நன்கு தெரிந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com