17 வயது சிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர் போக்சோவில் கைது

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்தது தொடர்பாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகம் பாப்பநாயக்கன்பட்டி சேர்ந்த 17 வயது சிறுமி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

இது குறித்து சிறுமியின் தந்தை நாகையாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை சின்னமணி மகன் அபிமணி (வயது 20), சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியையும், அபிமணியையும் மீட்டனர்.

தொடர்ந்து சிறுமியை கடத்திச் சென்றதாக அபிமணியை போக்சோ சட்டத்தின் கீழ் நாகையாபுரம் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமியை முத்துப்பட்டி காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com