வலங்கைமான் அருகே மோட்டார் சைக்கிள் மோதி இளம் பெண் பலி

வலங்கைமான் அருகே மோட்டார் சைக்கிள் மோதி இளம் பெண் பலியானார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே மோட்டார் சைக்கிள் மோதி இளம் பெண் பலியானார். இது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமாைன அடுத்த குப்ப சமுத்திரம் கலைஞர் நகரை சேர்ந்தவர் பிச்ைசயன. இவரது மகள் துர்கா (வயது 26). இவா் சம்பவத்தன்று வீட்டின் அருேக வலங்கைமான் மெயின் ரோட்டில் நடந்து ெசன்று ெகாண்டிருந்தார். அப்ேபாது குப்ப சமுத்திரம் கீழத்தெரு மெயின் ரோட்டை சேர்ந்த துரை மகன் சிந்து ராஜன் (32) என்பவா் ஓட்டிவந்த ேமாட்டார் சைக்கிள், துா்கா மீது ேமாதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்ைச பலனின்றி துர்கா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் லேசான காயத்துடன் சிந்துராஜன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com