காதல் திருமணம் செய்த இளம்பெண், குழந்தையுடன் கடத்தல்- வாலிபர் மீது புகார்

தனது மனைவி மற்றும் குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என்று கணவர் புகார் அளித்ததையடுத்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண் கடத்தல்
இளம்பெண் கடத்தல்
Published on

ஓசூர்:

ஓசூர் அரசனட்டி அமிர்தா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 33). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ஆர்ஷியா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுபிக்ஷா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆர்ஷியா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை ஸ்ரீதர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவியை, குழந்தையுடன் கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அனில் (27) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து தனது மனைவி மற்றும் குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com