எருமப்பட்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

எருமப்பட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் தனபால். மேஸ்திரி. இவருடைய மனைவி ரேணுகா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் ரேணுகாவிற்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரேணுகா சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரேணுகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டை குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com