

பெரம்பூர்:
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 21). இவர், சென்னை பெரம்பூரில் தங்கி பூக்கடை பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம்
இரவு பூக்கடை எத்திராஜ் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்தியபோது, அங்கு வந்த 2 பேர் தமீம் அன்சாரியிடம் மதுபானம் வாங்கி தரும்படி கேட்டனர்.
அதற்கு தமீம் அன்சாரி மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் 2 பேரும் தமீம் அன்சாரியை கீழே
தள்ளி விட்டனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த தமீம்அனசாரியை பூக்கடை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு
சிகிச்சை பலனின்றி தமீம்அன்சாரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், குடிபோதையில் தமீம் அன்சாரியை கீழே தள்ளிவிட்டதாக பூக்கடை பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வரும் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களான கலையரசன் (22), ஆனந்த் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.