மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் பெட்ரோல் குடித்து தற்கொலை முயற்சி

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் பெட்ரோல் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

மதுரை:

மதுரை புதூர் பகுதியை சேர்ந்த ஹாஜி பானு (வயது 25) என்பவர் கைக்குழந்தையுடன் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் திடீரென பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

எனவே அவரை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், “ஹாஜி பானுவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹாஜி பானு பெட்ரோல் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. தல்லாகுளம் போலீசார் இதுதொடர்பாக அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com