மேற்கு வங்காளத்தில் பலத்த பாதுகாப்புடன் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு - 35 தொகுதிகளுக்கு நடக்கிறது

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
தேர்தல் அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவற்றை சோதித்த காட்சி.
தேர்தல் அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவற்றை சோதித்த காட்சி.
Published on

மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்கிறது.

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ந்தேதி நடந்த நிலையில், 8-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று (ஏப்.29-ந்தேதி) நடைபெறுகிறது. மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன.

மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இன்று தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஷாஷி பாஞ்சா, நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி சதான் பாண்டே உள்ளிட்ட பிரமுகர்களும் அடங்குவர்.

தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com