வங்கியை முற்றுகையிட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 30 பேர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே வங்கியை முற்றுகையிட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வேலாயுதம்பாளையம்:

புதியவேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேலாயுதம்பாளையம் பாங்க் ஆப் இந்திய வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார் தொடர்ந்து வங்கி முன்பு அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம்பாரதி தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com