திண்டுக்கல் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

திண்டுக்கல் அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
விபத்து
விபத்து
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வேலை தொடர்பாக சென்றிருந்தார். பின்னர் வேலை முடிந்து அவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அங்குள்ள திண்டுக்கல்-மதுரை சாலையை கடக்க முயன்றார். 

இதற்கிடையே அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று நல்லதம்பி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். 

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com