வாணியம்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் கண்டன கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் கோவேந்தன் மற்றும் ராஜ்குமார், யுவராஜ், ஜெய்குமார், ராஜ்குமார், ரீகன், சரண்ராஜ், திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com